Sri Ramanavami Mahotsavam at Konerirajapuram from 30-10-2020 to 01-11-2020.

கோனேரிராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ கோதண்டராம சுவாமியின் ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் கடந்த 150 வருட காலமாக பத்து நாள் மகா அபிஷேகம் மற்றும் பஜனை யுடன் சீரும் சிறப்புடன் நடந்து வருவது பக்தகோடிகள் அனைவரும் அறிந்ததே !!!!
        இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி உற்சவம் ஆனது இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படியும் குரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டியும் மகா அபிஷேகம் மட்டும் சீரிய முறையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வருகின்ற 30 10 2020 ஆம் நாள் முதல் 01 11 2020 வரை மகா அபிஷேகமும் பஜனையும் திவ்ய நாம சங்கீர்த்தனம் மற்றும் சீதா கல்யாண மஹோத்ஸவம் ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு சிறப்பாக நடைபெற உள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி பரிபூரண கிருபா கடாட்சத்திற்க்கு பாத்திரமாகும் படி கேட்டுக் கொள்கிறோம் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி சீதா கல்யாண உற்சவம் நடைபெறும்,!!!
நிகழ்ச்சி நிரல்
 
30 10 2020 வெள்ளிக்கிழமை
மாலை 7 மணிக்கு பஜனை ஆரம்பம் தொடர்ந்து அஷ்டபதி
 
31 10 2020 சனிக்கிழமை
காலை 8 மணிக்கு அஷ்டபதி பஜனை
மாலை ஏழு மணிக்கு திவ்ய நாம சங்கீர்த்தனம்
 
01 11 2020 ஞாயிற்றுக்கிழமை
 
காலை எட்டு முப்பதுக்கு சீதா கல்யாணம் ஆரம்பம்
மதியம் 12 மணிக்கு சீதா கல்யாணம்
இரவு எட்டு முப்பதுக்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் வசந்த கேளிக்கை பவ லிம்பு மற்றும் கோணங்கி